இந்தியா

சென்னையில் 'ஸ்ட்ரீட் வியூ': புதிய வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள் மேப்

DIN


கூகுள் மேப் செயலில் நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த 'ஸ்ட்ரீட் வியூ' (street view) அம்சத்தை கூகுள் நிறுவனம் இன்று (ஜூலை 27) அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் சென்னை உள்பட 10 நகரங்கள் இந்த அம்சத்தில்  இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் செயலியின் வாயிலாக இருப்பிடங்களின் படங்களையும் காண இயலும்.

இது தொடர்பாக கூகுள் மேப் செயலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் 'ஸ்ட்ரீட் வியூ' அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இன்று முதல் கூகுள் மேப் செயலியில் 'ஸ்ட்ரீட் வியூ' அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட இடங்களின் தெளிவான புகைப்படங்கள், பயனர்களின் வசதிக்காக இடம்பெற்றுள்ளன. 

இந்தியாவில் சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை, ஹைதராபாத், புணே, நாசிக், வதோதரா, அஹமத்நகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட நகரங்கள் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நகரங்களில் சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை 'ஸ்ட்ரீட் வியூ' அம்சம் மூலம் புகைப்படங்களாக பார்க்க இயலும்.

இந்த அம்சம் உள்ளூர் போக்குவரத்துத் துறை உதவியுடன் விரைவில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் விரிவுபடுத்தப்படவுள்ளது. 

'ஸ்ட்ரீட் வியூ' அம்சம் உள்ளூர் சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை குறித்து அறிந்துகொள்ள உதவுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உள்ளிட்ட 10 நகரங்களின் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே 'ஸ்ட்ரீட் வியூ' அம்சத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் தெருக்களின் பெயர்கள் உள்பட இடம்பெற்றிருந்தாலும் புகைப்படங்கள் மிகுந்த தெளிவின்றி காணப்படுகின்றன. 

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில், கூகுள் மேப் செயலி 'ஸ்ட்ரீட் வியூ' அம்சத்தை அறிமுகம் செய்வதற்கு ஆரம்ப காலகட்டத்தில் மத்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT