இந்தியா

கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன்: ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு

DIN

பணமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு விசாரணையை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-இல் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனர்களுக்கு கார்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.கே. நாக்பால், ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஸ்கரராமன் தொடர்பு இருக்கும் குற்றச்சாட்டைக் கருத்தில்கொண்டு முன்ஜாமீன் மனுக்களை நிராகரித்தார்.

இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கானது நீதிபதி பூனம் ஏ பம்பா முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, புதன்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT