அதிகரிக்கும் கரோனா: வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமல்
கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், சண்டிகர் மாநில அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் பிறப்பித்துள்ளது.
கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், சண்டிகர் மாநில அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் பிறப்பித்துள்ளது.
நாட்டில் கடந்த சில நாள்களாக மாநில வாரியாத கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து வருகின்றன.
படிக்க | ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமை: முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா?
Advertisement
Advertisement
அந்தவகையில் சண்டிகர் மாநில அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களிலும், அதிக அளவு மக்கள் கூடும் இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.