இந்தியா

நாட்டில் புதிதாக 6,915 பேருக்கு கரோனா; 180 பேர் பலி

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,915 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 180 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அடங்கிய பட்டியலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

அதில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 6,915 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்த பாதிப்பு 4,29,31,045 ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 180 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,14,023ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,864  பேர் குணமடைந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 42,324,550ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் குணமடைவோர் விகிதம்  98.59 சதவிகிதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.20 சதவிகிதமாகவும் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT