முகப்பு
இந்தியா

‘வலிமை அதிகரிப்பால் இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு’: உ.பி. பிரசாரத்தில் மோடி

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால் தான் உக்ரைனில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்க முடிகிறது என உத்தரப்பிரதேச பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பேசினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பிரதமர் நரேந்திர மோடி(கோப்புப்படம்)
பகிர்:

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால் உக்ரைனில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்க முடிகிறது என உத்தரப்பிரதேச பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பேசினார்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 7 நாள்களாக உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதில், கர்நாடகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று பரிதாபமாக பலியானார். மேலும், ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து மத்திய அரசு சார்பில் உக்ரைனிலுள்ள மாணவர்களை மீட்க சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் ராபர்ட்ஸ்கஞ்சில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,

இந்தியாவின் வலிமை அதிகரித்துள்ளதால் உக்ரைனில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்க முடிகிறது. அனைத்து இந்தியர்களையும் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கானோர் இதுவரை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதற்கான ‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, நான்கு மத்திய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →