இந்தியாவில் இதுவரை 179.13 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 179.13 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 179.13 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 21.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,34,463 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,79,13,41,295 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,055 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,24,06,150 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.