இந்தியா

ஆபத்தை விளைவிக்கும் ஏவுகணையை இந்தியா வீசியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு

DIN

புதுதில்லி: மியான் சன்னுவில் இந்தியாவின் அதிவேக பறக்கும் பொருள் ஒன்று விழுந்ததாக பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறியுள்ளார்.  அநேகமாக இது  ஏவுகணையாக இருக்கலாம் என்று கூறினார்.

மார்ச் 9 அன்று, மாலை 6.43 மணியளவில், பாகிஸ்தான் விமானப்படையின் விண்வெளி பாதுகாப்பு நடவடிக்கை மையத்தால், இந்திய எல்லைக்குள் அதிவேக பறக்கும் பொருள் ஒன்று எடுக்கப்பட்டது என்று ஐஎஸ்பிஆர் தலைவர் கூறினார்.

அதிவேக பறக்கும் பொருள் திடீரென்று பாகிஸ்தான் எல்லையை நோக்கிச் சென்று  மியான் சன்னு அருகே விழுந்ததுள்ளது.

அப்பொருள் விழுந்தபோது, பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்தியது. உயிர் சேதம் எதுவும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்

இச்சம்பவத்திற்கு இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டு கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT