இந்தியா

நாட்டில் குறையும் கரோனா பாதிப்பு: புதிதாக 3,614 பேருக்குத் தொற்று

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,614 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 89 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு வருகின்றது. இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் புதிதாக 3,614 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 89 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,803-ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று ஒரேநாளில் 5,185 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,24,31,513 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது 40,559 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.09 சதவிகிதமாக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.44 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 179.91  கோடி கரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT