ஹிஜாபைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை: முஸ்லிம்கள் கடைகள் வைக்கத் தடை விதித்து போஸ்டர் 
இந்தியா

ஹிஜாபைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை: முஸ்லிம்கள் கடைகள் வைக்கத் தடை விதித்து போஸ்டர்

கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் வைக்கத் தடை விதித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ANI


மங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் வைக்கத் தடை விதித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள பப்பநாடு பரமேஸ்வரி கோயிலைச் சுற்றி ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில், கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் தங்களது கடைகளையோ பொட்டி உணவகங்களையோ வைக்க தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டபோது, இந்த போஸ்டர்கள் ஒட்ட அதிகாரப்பூர்வ அனுமதிவழங்கப்படவில்லை என்றும், கோயில் நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்படாமலேயே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுளள்து.

கோயில் நிர்வாகம் தரப்பில், யாரும் கடை அமைக்க தடை விதித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சட்ட நிபணர்களிடம் விளக்கம் பெற்றுக் கொண்டு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்ற போஸ்டர்கள், மங்களாதேவி கோயில், புத்தூர் அருகே உள்ள மகாலிங்கேஷ்வரா கோயில் உள்ளிட்டப் பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

SCROLL FOR NEXT