வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக, இடதுசாரி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக, இடதுசாரி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு திமுக மற்றும் இடதுசாரிகளை சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பொது வேலை நிறுத்தம்: தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை
முன்னதாக, வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.