இந்தியா

தில்லி முதல்வர் வீட்டின் மீது பாஜகவினர் தாக்குதல்: கேஜரிவாலை கொல்ல முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீடு மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடுமையாக விமர்சித்திருந்தார். 'படத்திற்கு வரிவிலக்கு எதற்கு? யூ ட்யூபில் வெளியிடுங்கள். அனைவரும் பார்க்கட்டும்' என்று கூறியிருந்தார். இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது திடீரென தில்லி முதல்வர் கேஜரிவாலின் வீட்டிற்குள் புகுந்து பாஜகவினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 'பாஜகவினர் அரவிந்த் கேஜரிவாலை கொல்ல முற்படுகின்றனர். தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதனால் அவரை கொல்வதற்கு முயற்சி செய்கின்றனர்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT