ஏஐசிடிஇ 
இந்தியா

சில பி.இ., படிப்புகளுக்கு கணிதம், வேதியியல் கட்டாயமில்லை: ஏ.ஐ.சி.டி.இ

ல பொறியியல்(பி.இ.,)  படிப்புகளில் சேர  +2 வகுப்பில் கணிதம், வேதியியல் படித்திருப்பது தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: சில பொறியியல்(பி.இ.,)  படிப்புகளில் சேர  +2 வகுப்பில் கணிதம், வேதியியல் படித்திருப்பது தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.  நடப்பு கல்வியாண்டிற்கான(2022-23) புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேர,  +2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த பாடங்களில் பெற்ற ‛கட் ஆப்' மதிப்பெண்களை பொறுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 

நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் சில பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்கள் தேவையில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) அறிவித்துள்ளது.

அதன்படி,  கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர +2 வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமில்லை மற்றும் வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் படிப்புகளில் சேர +2 வகுப்பில் கணிதம் தேவையில்லை என ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT