இந்தியா

'வணக்கம் சொல்லவே வந்தேன், நாளை சந்திக்கிறேன்' பரபரப்பைக் கூட்டிய சோனியா

DIN

நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருக்கும் திமுக அலுவலகத்துக்கு ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, அங்கு வந்து ஸ்டாலினை சந்தித்துவிட்டுச் சென்றார்.

இது அதிகாரப்பூர்வ சந்திப்பாக அமையவில்லை. திமுக அலுவலகத்துக்குள் வந்த சோனியா, ஸ்டாலினிடம், வணக்கம் சொல்லவே வந்தேன். நாளை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அவருக்கு பொன்னாடை அணிவித்து மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் சோனியா காந்தி - மு.க. ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றது.  இன்று பகல் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் மு.க. ஸ்டாலினின் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, நாடாளுமன்றம் வந்திருந்த ஸ்டாலின், திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார்.

இரு தலைவர்களும் அங்கு சந்தித்துப் பேசினர். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. பிறகு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் மு.க. ஸ்டாலின் சந்தித்து உரையாற்றினார்.

பிறகு பிரதமா் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் திமுக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய வரி வருவாய், மழை - வெள்ள நிவாரணத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT