இந்தியா

சுய உதவிக்குழு பெண்களுடன் 'மோமோஸ்' சமைத்த முதல்வர் மம்தா

DIN

மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் பகுதியிலுள்ள சுய உதவிக் குழு பெண்களுடன் சேர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி 'மோமேஸ்' என்ற உணவு வகையை சமைத்தார். 

மேற்கு வங்கத்திலுள்ள மலை மற்றும் சுற்றுலா தலமான டார்ஜிலிங் பகுதிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி சென்றார். பயணத்தின் கடைசி நாளான இன்று (மார்ச் 31) காலை அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த மகளிர் நடத்தி வந்த மோமோஸ் (உணவு வகை) கடையைப் பார்வையிட்டார். அவர்களுடன் பேசிய மம்தா பானர்ஜி அவர்களுடன் சேர்ந்து மோமோஸ் சமைத்தார். 

பிசைந்து வைத்திருந்த மாவை எடுத்து உள்ளடக்கம் வைத்து மடித்து மோமோஸ் செய்தார். இதனை அப்பகுதியில் இருந்த மக்கள் பார்த்து புகைப்படம் மற்றும் விடியோ எடுத்துக்கொண்டனர். மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து அவர்களைப் போன்றே மோமோஸ் சமைத்த மம்தாவை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர். மேலும் மம்தாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT