இந்தியா

நாட்டில் புதிதாக 3,205 பேருக்குத் தொற்று: 2,802 பேர் மீண்டனர்

நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,568 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 3,205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2,802 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

DIN


புது தில்லி: நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,568 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 3,205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2,802 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 3,205 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,88,118 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,920 ஆக உள்ளது. 

நேற்று ஒரேநாளில் 2,802 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,44,689 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 19,509 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.05 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.98 சதவிகிதமாக உள்ளது. வராந்திர தொற்று பாதிப்பு 0.76 சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 189.48 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 83.89 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,27,327 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

SCROLL FOR NEXT