இந்தியா

யுஏஇ அதிபர் மறைவு: இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு இந்திய அரசு சார்பில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

DIN

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு இந்திய அரசு சார்பில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் அலி நகியான் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 73. 2004-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு இந்திய அரசு சார்பில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் நாளை தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ஷேக் கலீஃபா பின் சையத் மறைவு குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக இருந்தார். 
அவரது தலைமையின் கீழ் இந்தியா-யுஏஇ உறவுகள் முன்னேற்றமடைந்தது. ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT