இந்தியா

குருநானக் தேவ் மருத்துவமனை தீ விபத்து: வருத்தம் தெரிவித்த பஞ்சாப் முதல்வர்!

DIN

பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் குருநானக் தேவ் மருத்துவமனை தீ விபத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தற்போதைய நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், குருநானக் தேவ் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த துரதிஷ்ட செய்தியை அறிந்தேன். தீயினை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள். கடவுளின் கருணையால் மருத்துவமனை தீ விபத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை. மீட்பு நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பதிவிட்டுள்ளார். 

 பஞ்சாப் மாநில முதல்வர் மட்டுமல்லாது, ஷிரோமனி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பதால் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் நேரக்கூடாது என கடவுளை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர். 

குருநானக் தேவ் மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீயினை கட்டுக்குள் கொண்டுவர 8 தீயணைப்பு வாகனங்கள்  சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

SCROLL FOR NEXT