இந்தியா

குஜராத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம்: 30 பேர் கைது

DIN

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். 

போராட்டக்காரர்களில் பலர் காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளை அணிந்திருந்தனர். சிலர் சிலிண்டர்கள் மற்றும் எரிபொருள் விநியோகிப்பாளர்களின் கட்அவுட்கள் மற்றும் ஆளும் பாஜக மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். 

கட்சியின் ராஜ்கோட் நகரத் தலைவர் அர்ஜூன் கட்டாரியா தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

மக்கள் துயரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் பாஜக அரசை எழுப்புவதற்காகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

சமையல் சிலிண்டர்கள், உடைகள், யூரியா என அனைத்தும் இப்போது விலை உயர்ந்ததாக இருக்கிறது என்று கட்டாரியா கூறினார்.

இதுதொடர்பாக கட்டாரியா, 2 பெண்கள் உள்பட 30 காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாக பிரத்யும்னா நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT