இந்தியா

ரகசியக் குறிப்புகளை சிபிஐ கைப்பற்றியது: மக்களவைத் தலைவருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

DIN

தன்னையும் தன் குடும்பத்தையும் விசாரணை அமைப்புகள் குறிவைப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

விதிமுறைகளை மீறி 263 சீனப் பணியாளர்களுக்கு விசா பெற்றுத் தருவதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முற்றிலும் நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்புகளை சிபிஐ கைப்பற்றி நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியுள்ளதாகவும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கடிதத்தில், 'பொய் வழக்குப் போட்டு தனது குரலை ஒடுக்க சிபிஐ முயற்சிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தன்னையும், தனது குடும்பத்தையும் விசாரணை அமைப்புகள் குறிவைக்கின்றன.

நாடாளுமன்ற நிலைக்குழு தொடர்பான எனது ரகசியமான தனிப்பட்ட குறிப்புகளை சிபிஐ சோதனையின்போது கைப்பற்றிவிட்டது. நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ மீறிவிட்டது. சிபிஐ நடவடிக்கை எனது நாடாளுமன்ற செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுகிறது . இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT