இந்தியா

ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்? வெளியான அதிர்ச்சித் தகவல்

DIN

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்றின் மூன்றாவது அலையினால் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறித்து 5,971 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில், வயதானவர்களை விடவும் அதிகளவு இளையோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

தேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் கோவைட்19 பணிக்குழுவின் இணைத் தலைவரான டாக்டர். ராஜீவ் ஜெயதேவன் நடத்திய கருத்துக்கணிப்பில் 40 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பேருக்கு கரோனா சோதனையில் நேர்மறை முடிவுகள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 30 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவிகிதம் பேரும், 20 வயதுக்குட்பட்டவர்களில் 31.8 சதவிகிதம் பேரும், 10 வயதுக்குட்பட்டவர்களில் 21 சதவிகிதம் பேரும் கரோனா மூன்றாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"இது சமூகத்தின் பல்வேறு நிலைகளில் உற்பத்தித்திறன் இழப்பைக் குறிப்பதாகவும், கரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் மருத்துவமனைகளின் தேவைகளை அதிகரிப்பதுடன் பொருளாதாரத்திற்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என டாக்டர்.ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.

மேலும் கரோனாவின் மற்ற அலைகளைக் காட்டிலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகமாக இருந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT