முகப்பு
இந்தியா

பெங்களூருவில் மருத்துவமனையின் முகப்பு சரிந்து விபத்து: 4 பேர் மீட்பு

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் முகப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் முகப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இன்று காலை 6.15 மணியளவில் செயின்ட் மார்த்தா தனியார் மருத்துவமனையின் முகப்பு வளைவு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

கர்நாடக தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணியை மேற்கொண்டர். பின்னர் தொழிலாளர்கள் மொயுதீன், சந்த் பாஷா, ரபி சாப், பசவராஜ் ஆகியோர் மீட்கப்பட்டனர். 

மத்தியப் பிரிவு மருத்துவர் எஸ்.டி. சரணப்பா கூறியதாவது: 

சம்பவம் தொடர்பாக ஆவணங்களைச் சரிபார்த்து நடவடிக்கை எடுப்போம் என்றார். 

போதிய சுமை தாங்கும் தூண்கள் பொருத்தப்படாததால் போர்டிகோ இடிந்து விழுந்ததாக போலீஸ் வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →