கே.டி.ராமா ராவ் (கோப்புப் படம்) 
இந்தியா

‘சொந்த தொகுதியைகூட கைப்பற்றாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி’: டிஆர்எஸ் பதிலடி

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விமர்சித்த ராகுல் காந்திக்கு மாநில அமைச்சர் கே.டி. ராமா ராவ் பதிலளித்துள்ளார்.

DIN

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை விமர்சித்த ராகுல் காந்திக்கு மாநில அமைச்சர் கே.டி. ராமா ராவ் பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் தற்போது தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றுமை நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி செய்தியாளர்களை நேற்று சந்தித்தார்.

அப்போது, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய கட்சியை நடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். அவர் சர்வதேச கட்சியை நடத்துவதாகக் கூட நினைத்துக்கொள்ளலாம் என விமர்சித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தெலங்கானா அமைச்சர் கேடி ராமா ராவ் கூறியதாவது:

“சொந்த நாடாளுமன்ற தொகுதியான அமேதியில்கூட வெற்றி பெற முடியாத சர்வதேச தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் கேசிஆரின் தேசிய கட்சியின் லட்சியத்தை கிண்டல் செய்கிறார். பிரதமராக விரும்புவதற்கு முன்பு முதலில் எம்.பி.யாக தேர்வு செய்ய மக்களை சமாதானப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

SCROLL FOR NEXT