இந்தியா

கோவாவில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் இதுதான் முக்கிய காரணமாம்!

கோவாவில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் தான் முக்கிய காரணம் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

DIN

கோவாவில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் தான் முக்கிய காரணம் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் சுற்றுலா தொடர்பான பல நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கோவா அரசு திங்கள் கிழமை உத்தரவு பிறப்பித்ததுடன், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறைக்கு உத்தரவிட்டது. 

பனாஜியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எம்.பி நாயக் கூறுகையில், 

சுற்றுலாத் துறையில் உள்ள குளறுபடிகளைச் சுத்தம் செய்வதில் மாநில சுற்றுலா அமைச்சகம் பாராட்டுக்குரிய பணியைச் செய்து வருகிறது. 

கோவாவில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் போதைப்பொருள் முக்கிய காரணம்.  சுற்றுலாத் துறையில் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் கோவா அரசு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் கௌண்டே ஆகியோரை நான் ஆதரிக்கிறேன். 

மாநில அரசு பல்வேறு கொள்ளைகளை வகுத்து வருவதோடு, சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

அனுமதிக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட மண்டலங்களுக்குள் நடத்தப்படும் மற்ற பகுதிகளிலிருந்து படகு சவாரி, நீர் விளையாட்டு, உல்லாசப் படகு டிக்கெட்டுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் கவுண்டர்கள் தவிர மற்ற இடங்களில் சுற்றுலா நடவடிக்கைகளுக்கான டிக்கெட் விற்பனை செய்தல் உள்ளிட்ட 10 செயல்பாடுகளுக்குச் சுற்றுலாத் துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT