இந்தியா

அக்டோபரில் அதிகரித்த தேசிய வேலைவாய்ப்பின்மை விகிதம்

DIN

நாட்டில் அக்டோபர் மாதம் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக சிஎம்பிசி வெளியிட்டுள்ள தரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய பொருளாதார கண்காணிப்பு மையம் வேலையின்மை விகிதம் தொடர்பான தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த செப்டம்பர் மாதம் நாட்டில் வேலையின்மை விகிதம் 6.4 சதவிகிதத்திலிருந்து 7.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் வேலையின்மை விகிதம் 7.8 சதவிகிதத்திலிருந்து 7.2 சதவிகிதமாக குறைந்துள்ளதாகவும், கிராமப்புற பகுதிகளில் 5.8 சதவிகிதத்திலிருந்து 8.04 சதவிகிதமாக அதிகரித்துள்ளதும் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் கடந்த 2021 மற்றும் 2020ஆம் ஆண்டுகளின் அக்டோபர் காலப்பகுதியில் வேலையின்மை விகிதம் 7.7 மற்றும் 7 சதவிகிதங்களாக இருந்தன.  இதுவே கடந்த 2019 அக்டோபரில் 8.1 சதவிகிதமாக இருந்தது. 

2022 அக்டோபர் மாதம் நாட்டிலேயே அதிகமான வேலைவாய்ப்பின்மை விகிதத்துடன் (31.8 சதவிகிதம்) ஹரியாணா முன்னணியில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் (30.7 சதவிகிதம்), ஜம்மு காஷ்மீர்(22.4 சதவிகிதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதேபோல் குறைந்தபட்ச வேலைவாய்ப்பின்மை விகிதத்துடன் (0.8 சதவிகிதம்) மத்தியப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய இடங்களை சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் பிடித்துள்ளன.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT