இந்தியா

மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழித்த நபர், வைரலாகும் விடியோ

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

DIN

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்துவது, எச்சில் துப்புவது போன்றன தண்டனைக்குரிய குற்றமாகும். 

அடையாளம் தெரிய நபர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சிறுநீர் கழிக்கும் விடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பது இதுவே முதல்முறையாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடியோவினைப் பதிவிட்ட அந்த பயனாளர் தில்லி முதலமைச்சர் அலுவலகம் மற்றும் தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கும் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தை தூய்மையாக வைக்க ஒத்துழைக்க வேண்டும். பயணிகளுக்காக கழிவறை வசதிகள் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் செய்து தரப்பட்டுள்ளது. பயணிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்தினால் அவர்கள் குறித்து யார் வேண்டுமானும் மெட்ரோ நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கலாம். அதேபோல எங்களது 24 மணி கட்டணமில்லா சேவை மைய தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதன் மூலம் ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூா் புத்தகத் திருவிழா தொடங்கியது! பிப்.3 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது!

தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்: விலங்கு நல ஆா்வலா்கள் குற்றச்சாட்டு

இணைய நிறுவனங்களின் 14.9 கோடி கணக்குத் தரவுகள் கசிவு: ஆய்வறிக்கையில் தகவல்

பள்ளிகளில் மனநலன், வேலைவாய்ப்பு ஆலோசகா்களை நியமிப்பது கட்டாயம்: சிபிஎஸ்இ

வரும் 27-இல் 5 மெமு ரயில்கள் முழுவதும் ரத்து

SCROLL FOR NEXT