ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று மகாராஷ்டிரத்தில் தொடக்கம்!
ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று மகாராஷ்டிரத்தில் தொடங்குகிறது.
ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று மகாராஷ்டிரத்தில் தொடங்குகிறது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில்ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது தெலங்கானாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று தெலங்கானாவின் கமரெட்டி பகுதியில் நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸார் இன்று மாலை மகாராஷ்டிரத்தில் பயணத்தைத் தொடங்குகின்றனர்.
இதுவரை 381 கிமீ பயணத்தை முடித்துள்ள ராகுல் காந்தி, காஷ்மீர் வரை 2,355 கிமீ தூரத்தைக் கடக்கிறார்.