ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம்: அதுவும்.. 
இந்தியா

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் புகைப்படம்: அதுவும்..

கர்நாடக ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் அரை நிர்வாணத்தில் இருக்கும் சன்னி லியோன் புகைப்படம் இருந்தது, தேர்வர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

DIN


ஷிவமோகா: கர்நாடக ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் அரை நிர்வாணத்தில் இருக்கும் சன்னி லியோன் புகைப்படம் இருந்தது, தேர்வர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள்,  இணையதளத்திலிருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி, ஒரு பெண் பதிவிறக்கம் செய்த தனது ஹால்டிக்கெடில் தனது புகைப்படத்துக்குப் பதிலாக, சன்னிலியோனின் அரை நிர்வாண புகைப்படம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வேறு வழியில்லாமல், அதன் மீது தனது புகைப்படத்தை ஒட்டி, ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வுக்கும் வந்து, தேர்வு மையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து பள்ளிக் கல்வித் துறை, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.இது குறித்து ஷிவ்மோகா சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

SCROLL FOR NEXT