இந்தியா

காஷ்மீரில் 2 பேருந்துகள் மோதி விபத்து: 13 வயது சிறுமி உள்பட 3 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

DIN



ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டம் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை காலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. 

சேதமடைந்துள்ள பேருந்தின் முன்பகுதி

இதில், 13 வயது சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் அனைவரும் சம்பா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பலத்த காயமடைந்துள்ள 7 பேர் வேறு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சம்பா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் பாரத் பூஷன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: குடியரசுத் தலைவா்

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பாமக சாா்பில் பொதுக்குழுக் கூட்டம்

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு எதிரான மகளிா் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு

SCROLL FOR NEXT