ஹிமாச்சல பிரதேசத்தில் காலை 11 மணி நிலவரப்படி 17.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
68 தொகுதிகள் கொண்ட ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தல் ஒரேகட்டமாக இன்று(நவ. 12) நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7,884 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த வாக்குச் சாவடிகளில் 789 மையங்கள் பதற்றமானவையாகவும், 397 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.