இந்தியா

தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

DIN

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கு குறித்த மத்திய அரசு, மனுதாரர்கள் 5 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தி சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்' என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்குரைஞரிடம் ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. 

புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணையின்போது, அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இன்றைய வழக்கு விசாரணையின்போதும் அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது. 

அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது ஏன்? 4 அதிகாரிகளில் அருண் கோயலை தெரிவு செய்தது எப்படி என்பது போன்ற கேள்விகளை நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்வைத்தது. 

தொடர்ந்து, தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு குறித்த மத்திய அரசு, மனுதாரர்கள் 5 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT