நிர்மலா சீதாராமனை சந்தித்தார் பழனிவேல் தியாகராஜன் 
இந்தியா

நிர்மலா சீதாராமனை சந்தித்தார் பழனிவேல் தியாகராஜன்

புது தில்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

DIN

புது தில்லி: புது தில்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

தமிழகத்துக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரானை நேரில் சந்தித்து பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மதுரையில் நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கான கடன் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம், பழனிவேல் தியாகராஜன் தகவல்களை கேட்டறிந்துள்ளார்.

இந்தியாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில் அடுத்தக் கூட்டம் மதுரையில் உறுதியாக நடைபெறும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT