இந்தியா

செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரிப்பு

PTI

புது தில்லி: நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஆகஸ்ட் மாதத்தை விட 26 சதவீதம் உயர்ந்து ரூ.1.47 லட்சம் கோடியாக உள்ளது.

மத்திய நிதியமைச்சகம் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாட்டின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பரில் ரூ.1,47,686 கோடியாக இருந்தது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,271 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.31,813 ஆகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி  ரூ.80,464 கோடியாகவும், செஸ் வரி ரூ.10,137 கோடியாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் ஜிஎஸ்டி 26 சதவீதம் அதிகமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT