இந்தியா

நாட்டில் 133 நாள்களுக்கு பின் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,968 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 34,598-ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,99,466 ஆக உள்ளது.

ஒரு நாளில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,28,716-ஆக அதிகரித்துள்ளது. 

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.73 சதவிகிதமாக உள்ளது. 

இந்தியாவின் கரோனா தொற்றின் எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23, 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும் தாண்டியது.

செப்டம்பர் 28-ல் 60 லட்சத்தையும், அக்டோபர் 11 ஆம் தேதி 70 லட்சத்தையும், அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சத்தையும் தாண்டி, டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடியைத் தாண்டியது.

கடந்த ஆண்டு மே 4 ஆம் தேதி இரண்டு கோடி மற்றும் ஜூன் 23 ஆம் தேதி மூன்று கோடியை தாண்டியது. இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி அன்று நான்கு கோடியைத் தாண்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT