இந்தியா

குவஹாட்டி ஐஐடி விடுதி அறையில் ஆந்திர மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை

குவஹாட்டி ஐஐடி விடுதி அறையில் ஆந்திர மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

குவஹாட்டி ஐஐடி விடுதி அறையில் ஆந்திர மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த குட்லா மகேஷ் சாய் ராஜ்(20) என்ற மாணவர் குவஹாட்டியில் உள்ள ஐஐடியில் பி.டெக் பயின்று வந்துள்ளார். இவர் கடந்த ஞாயிறு அன்று ஐஐடியில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து நிகவிடத்துக்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த உடலை மாணவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே குவஹாட்டி ஐஐடி வெளியிட்ட அறிக்கையில், விடுதி கட்டடத்தில் முன்னாள் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேசமயம் காவல்துறையின் விசாரணைக்கு முழு  ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 16 ஆம் தேதி இதேபோல் கேரளத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் குவஹாட்டி ஐஐடி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT