இந்தியா

மாஸ்கோவிலிருந்து தில்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN

மாஸ்கோவிலிருந்து தில்லி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாலை 3.20 மணிக்கு தில்லி வந்த விமானத்திலிருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது.

மாஸ்கோவிலிருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை தில்லி வந்த பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

இதையடுத்து, தில்லியில் அதிகாலை 3.20 மணிக்கு வந்த விமானத்திலிருந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் இறக்கிவிடப்பட்டனர். 

பிறகு, விமானம் முழுக்க வெடிகுண்டு ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானத்தை சோதித்ததில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT