குஜராத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லை
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 18, 2023 அன்று முடிவடைகிறது. கடந்த 2017 ஆம் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும், 1 இடத்தில் என்சிபியும், பாரதிய பழங்குடியினர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் முறையே 2 மற்றும் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஹிமாச்சலில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது. பாஜக தனிப்பெரும்பான்மையை தக்கவைத்து 6-வது முறையாக ஆட்சி அமைத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.