இந்தியா

முடியாது என்பதை முடித்து காட்டியது மோடி அரசு, அது ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தோ அல்லது ராமர் கோயிலோ: அமித் ஷா

முடியவே முடியாது எனக் கூறும் விஷயங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடித்துக் காட்டியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

DIN

முடியவே முடியாது எனக் கூறும் விஷயங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடித்துக் காட்டியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது போன்றன மோடி தலைமையிலான அரசினால் சாத்தியமாகியுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஹிமாசலப் பிரதேசத்தில் தேர்தல் தொடர்பான பேரணி ஒன்றில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தெரிவித்தார்.

பேரணியில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:  மோடி தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் நீக்கியது. நீங்கள் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என்று என்றாவது நினைத்திருக்கிறீர்களா? காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 அப்போதைய பிரதமர் நேருவினால் கொண்டு வரப்பட்டதால் இந்த விஷயத்தில் மௌனமாக மட்டுமே இந்துள்ளது. அதேபோல அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்திலும் மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்று ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டப்பிரிவு 370 ஆக இருந்தாலும் சரி அல்லது ராமர் கோயில் கட்டுவதாக இருந்தாலும் சரி முடியாது என இருந்ததை மோடி தலைமையிலான அரசு சாத்தியமாக்கியுள்ளது என்றார்.

ஹிமாசலப் பிரதேசத்தில் வருகிற நவம்பர் 12 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT