இண்டிகோ விமான தீ விபத்து: விசாரணைக்கு உத்தரவு
இண்டிகோ விமான என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இந்தியாஇண்டிகோ விமான தீ விபத்து: விசாரணைக்கு உத்தரவு
இண்டிகோ விமான என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
இண்டிகோ விமான என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
தில்லியிலிருந்து பெங்களூருவுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இண்டிகோ 6இ-2131 விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வலது என்ஜினில் தீப்பொறி கிளம்பியுள்ளது.
இதனைக் கண்ட விமானி, தில்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். தொடர்ந்து தில்லி விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான என்ஜினில் வேகமாக தீ பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட விடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்நிலையில், இண்டிகோ விமான என்ஜினில் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
தற்போது விமானம் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இண்டிகோ விமான என்ஜினில் தீ: 184 போ் உயிா் தப்பினா்