இந்தியா

சந்திரசேகர ராவ் தேசிய கட்சியை நடத்துகிறாரா? ராகுல் காந்தி கேள்வி

DIN

சந்திரசேகர ராவ் தேசிய கட்சியை நடத்துவதாக  நம்பிக்கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் தற்போது தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றுமை நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், ''தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் தேவையற்றது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய கட்சியை நடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். அவர் சர்வதேச கட்சியை நடத்துவதாகக் கூட நினைத்துக்கொள்ளலாம்'' என சூசகமாக விமர்சித்துள்ளார். 

தெலங்கானா மாநிலத்தில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இவ்வாறு பேசியது, டிஆர்எஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. 

தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடைப்பயணம். பிறகு மதிய உணவு இடைவேளை. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைப்பயணம். இரவு ஓய்வு எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செப். 10 வரை மொத்தம் 56 கி.மீ., கேரளத்தில் 17 நாள்கள், கா்நாடகத்தில் 21 நாள்கள், தெலங்கானாவில் 13 நாள்கள், ஆந்திரத்தில் 3 நாள்கள் என தென்மாநிலங்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT