சாக்லேட் திருடிய விடியோ வைரல்; கல்லூரி மாணவி தற்கொலை 
இந்தியா

சாக்லேட் திருடிய விடியோ வைரல்; கல்லூரி மாணவி தற்கொலை

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தௌர் மாவட்டத்தில், ஒரு வணிக நிறுவனத்தில் பெண் ஒருவர் சாக்லேட் திருடிய விடியோ வைரலானதைத் தொடர்ந்து, அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

PTI

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்தௌர் மாவட்டத்தில், ஒரு வணிக நிறுவனத்தில் பெண் ஒருவர் சாக்லேட் திருடிய விடியோ வைரலானதைத் தொடர்ந்து, அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி, சாக்லேட் திருடும் விடியோ வைரலானதால், அதிர்ச்சி அடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சுபாஷ்பள்ளி என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவந்த கல்லூரி மாணவியின் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து அவரது தந்தை கூறுகையில், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி அவர் தனது சகோதரியுடன் அருகில் உள்ள கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சாக்லேட் திருடும் போது பிடிபட்டிருக்கிறார். இதற்காக கடை உரிமையாளரிடம் உரிய பணத்தையும் கொடுத்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் சாக்லேட் திருடும் போது மாட்டிக் கொள்வது மற்றும் மன்னிப்புக் கேட்கும் விடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள், அந்த வணிக நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு, விடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT