முகப்பு
இந்தியா

தேசிய சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் நியமனம்

தேசிய சட்ட ஆணையத்தின் செயல் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

தேசிய சட்ட ஆணையத்தின் செயல் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். 

தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக நீதிபதி சந்திரசூட்டின் பெயரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார். 

இதுகுறித்த அறிவிப்பு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் இருந்தார். 

உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் சமீபத்தில் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →