இந்தியா

இனி இவர்களுக்கும் 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு உண்டு: மத்திய அரசு

DIN

இனி இவர்களுக்கும் 60 நாள்கள் மகப்பேறு விடுப்பு உண்டு: மத்திய அரசு
புது தில்லி: மகப்பேறு காலத்துக்கு முன்பே குழந்தை இறந்துபிறந்தாலோ அல்லது பிரசவத்தின்போது குழந்தை இறந்துவிட்டாலோ, பிறந்த சில நாள்களில் குழந்தை இறந்துவிட்டாலோ அந்த மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கும் 60 நாள்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

குழந்தை பிறக்கும் போதே இறந்து பிறந்தாலோ அல்லது 28 வாரங்களுக்குப் பிறகு கருவுக்கு ஏதேனும் நேர்ந்தாலோ இந்த 60 நாள்கள் மகப்பேறு விடுப்பினை மத்திய அரசில் பணியாற்றும் பெண் தொழிலாளி அல்லது ஊழியர் எடுத்துக் கொள்ளலாம்.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அலுவலகம் இது தொடர்பான அறிவிப்பாணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அந்த அறிவிப்பாணையில், குழந்தை பிறக்கும் போதே இறந்த அல்லது பிறந்த ஓரிரு நாள்களில் இறந்த சம்பவங்களில், அந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு எடுகக் தகுதி இருக்கிறதா என்று பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி எடுக்கப்பட்டிருக்கும் முடிவின் அடிப்படையில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இந்த அறிவிப்பை வெளியிடுகிறது. அதாவது, பிறக்கும்போதே இறந்த அல்லது பிறந்த ஒரு சில நாள்களில் இறந்த குழந்தை இறந்ததால் தாய்க்கு நேரிட்ட துயரங்களைக் கருத்தில் கொண்டு, அது அந்ததாயின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மிகப்பெரிய தாக்கத்தையும் அதிலிருந்து பெண் விடுபட சிறப்பு மகப்பேறு விடுப்பாக 60 நாள்களை மத்திய அரசுப் பணியில் இருக்கும் பெண் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் இருக்கும், அரசு மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை பெறும் மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஏதேனும் அவசர காலத்தில் தனியார் மருத்துவமனையில் குழந்தைப் பேறு நிகழ்ந்தால், அதற்கான சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT