இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி மாரடைப்பால் மரணம்

DIN

பாகிஸ்தானால் பணம் பெற்று இந்தியாவில் தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதி சுப்ரன் உசேன் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு, ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். 

கடந்த இரண்டு வாரங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற போது பாகிஸ்தானை சேர்ந்த சுப்ரன் உசேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

சுப்ரக் உசேன் அங்கு இயங்கி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் இந்தியாவில் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்தான். இதற்காக தீவிரவாத அமைப்பினர் அவனுக்கு பண உதவியும் செய்ததாக கூறப்படுகிறது. 

சுப்ரன் உசேனிடம் விசாரணை நடத்தியதில் அவன் தனது கூட்டாளிகளுடன் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. 

இந்நிலையில்,சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்டம்பர் 3) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். 

கடந்த மாதம் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா செக்டார் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் சுப்ரக் உசேன் காயமடைந்தான். 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் உசேன், இந்திய ராணுவச் சாவடி மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார்.

2016 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் அவரது சகோதரர் ஹாரூன் அலியுடன் உசேன் கைது செய்யப்பட்டார், மேலும், மனிதாபிமான அடிப்படையில் 2017 நவம்பரில் அவர் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT