இந்தியா

காங்கிரஸை களத்தில் காண முடியவில்லை: குலாம் நபி ஆசாத் 

DIN


காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை என அக்கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். 

காங்கிரஸின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும், இது தொடா்பாக கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அவர் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும் இன்னும் சில நாள்களில் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத் பேசியதாவது: 

காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை கணினி, டிவிட்டரில் மட்டுமே இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களே எனது கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் எனது கட்சி கவனம் செலுத்தும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

அடுத்த டயமண்ட் லீகில் கட்டாயம் முதலிடம்: நீரஜ் சோப்ரா உறுதி

பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

SCROLL FOR NEXT