நாட்டில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 16 பேர் பலி
நாட்டில் ஒரேநாளில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் பலியாகியுள்ளனர்.
புது தில்லி: நாட்டில் ஒரேநாளில் புதிதாக 5,910 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,44,62,445 ஆக உள்ளது.
இதையும் படிக்க | தக்காளி விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 53,974 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.12 சதவீதமாக உள்ளது.
மேலும், 16 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,28,007 ஆக உள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.
கரோனாவிலிருந்து மேலும் 7,034 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,80,464 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.69 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 2,13,52,74,945(213 கோடி) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மட்டும் 32,31,895 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.