குடும்பப் பகை: சிறுமியின் கழுத்தை அறுத்து, ஆசிட் ஊற்றிய தாய்மாமன் 
இந்தியா

குடும்பப் பகை: சிறுமியின் கழுத்தை அறுத்து, ஆசிட் ஊற்றிய தாய்மாமன்

ஆந்திர மாநிலத்தில், குடும்பப் பகை காரணமாக, சிறுமியின் கழுத்தை அறுத்து, அவரைக் கொலை செய்வதற்காக வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

DIN


ஆந்திர மாநிலத்தில், குடும்பப் பகை காரணமாக, சிறுமியின் கழுத்தை அறுத்து, அவரைக் கொலை செய்வதற்காக வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் வேலைக்காக வெளியே சென்றிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த சிறுமியின் தாய்மாமன் நாகராஜைப் பார்த்த சிறுமி, வீட்டுக்குள் இருந்த கழிப்பறைக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளார். 

அங்கேச் சென்ற நாகராஜ், சிறுமியின் கழுத்தை அறுத்தும், அங்கிருந்த ஆசிட்டை எடுத்து அவரது வாயில் ஊற்றியும் கொலை செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைப் பார்த்தும், சிறுமிக்கு உதவுவது போல நகராஜ் நடித்துள்ளார்.

ஆனால் தனது வாயில் ஆசிட் ஊற்றியது நாகராஜ்தான் என்று சிறுமி சைகை மூலம் அக்கம் பக்கத்தினருக்குக் கூறியதைத் தொடர்ந்து, மக்கள் சேர்ந்து நாகராஜைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT