இந்தியா

விரைவில் தில்லி செல்லும் லாலு, நிதிஷ்!

முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாக தளம் தலைவர் லாலு பிறசாத்தும் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க உள்ளதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

DIN

முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாக தளம் தலைவர் லாலு பிறசாத்தும் தில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க உள்ளதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

2024 மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இரு தலைவர்களும் சோனியாவைச் சந்திக்க உள்ளனர். சோனியா காந்தி தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் புது தில்லிக்கு திரும்பியதும் இந்த சந்திப்பு நிகழும் என்று தேஜஸ்வி கூறினார். 

முன்னதாக எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நிதிஷ்குமார் தலைநகருக்குச் சென்றிருந்தார். ஆனால் சோனியா காந்தி இல்லாததால் அவரை சந்திக்க இயலவில்லை. பின்னர் ராகுல் காந்தியை நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். 

கடந்த 2 நாள்களாக தில்லியிலிருந்த தேஜஸ்வி, திங்கள்கிழமை காலை பாட்னா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT