இந்தியா

ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

DIN

ஜம்மு - காஷ்மீரில் மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள பிராரி பல்லா சாவ்ஜியன் அருகே மினி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

ராணுவம், உள்ளூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், 24 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், மண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதில் ஐந்து பேர் சிறப்புச் சிகிச்சைக்காக ஜம்மு நகருக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT