இந்தியா

ஸ்ரீநகர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டனர்!

மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

DIN

மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

நவ்காமில் உள்ள டேங்கர்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் குறிப்பிட்ட தகவலின் பேரில், காவல்துறை மற்றும் ராணுவம் இணைந்து சுற்றிவளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். 

தேடல் நடவடிக்கையின் போது, ​மறைந்திருந்த பயங்கரவாதிகள் கூட்டு தேடுதல் குழுவினர் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர். 

இதைத் தொடர்ந்து நடந்த என்கவுண்டரில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன. இவர்கள் புல்வாமாவைச் சேர்ந்த ஐஜாஸ் ரசூல் நஜர் மற்றும் அபு ஹம்சா என்ற ஷாகித் அகமது என அடையாளம் காணப்பட்டனர். 

மேலும்,  கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த் உடன் தொடர்புடையவர்கள். மேலும், பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்கள், பொதுமக்கள் அட்டூழியங்கள் உள்பட பல பயங்கரவாத குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என காவல்துறை கூறியுள்ளது. 

என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து ஒரு ரைபிள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு கையெறி குண்டு, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்ததில் 3 மாடுகள் உயிரிழப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை எதிா்த்தது ஆா்எஸ்எஸ்: காங்கிரஸ்

ராமநாதபுரம் அருகே திமுக பிரமுகா் வீடு மீது பெட்ரோல் குண்டுவீச்சு

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

SCROLL FOR NEXT