இந்தியா

ஒரு வாரத்திற்குள் 2வது சம்பவம்: குஜராத்தில் லிஃப்டில் தவறி விழுந்து 2 பேர் பலி!

குஜராத்தின் சூரத் நகரில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

குஜராத்தின் சூரத் நகரில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் 14வது மாடியிலிருந்து தவறி விழுந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நகரின் பண்டேசரா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தில் லிஃப்டில் பணிபுரியும் போது தொழிலாளர்கள் கீழே விழுந்ததாக காவல்துறை துணை ஆணையர் சாகர் பாக்மர் தெரிவித்தார். 

பல்லாடியம் ரெசிடென்சியின் 14வது தளத்தில் லிஃப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தொழிலாளி ஒருவர் ஸ்டூலில் நின்று துளையிட்டுக் கொண்டிருந்தார்.திடீரென ஸ்டூல் நகர்ந்ததால், இருவரும் சமநிலை இழந்து தவறி கீழே விழுந்து இறந்தனர். 

முதற்கட்ட விசாரணையின்படி, தொழிலாளர்கள் பாதுகாப்பு பெல்ட் எதுவும் அணியவில்லை என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

முன்னதாக புதன்கிழமை, அகமதாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் லிஃப்ட் அறுந்து விழுந்ததால் ஏழு தொழிலாளர்கள் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 5

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 4

அ(ஆ)பர்ணா தாஸ்!

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 3

அக்டோபர் மாத எண்கணித பலன்கள் - 2

SCROLL FOR NEXT